தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

Maamannan: ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மாமன்னன் படத்தில் பாட்டு பாடிய வடிவேலு! - Mari Selvaraj

'மாமன்னன்' படத்திற்காக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வடிவேலு பாடிய பாடல் மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Maamannan Update: ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வடிவேலு பாடிய பாடல்
Maamannan Update: ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வடிவேலு பாடிய பாடல்

By

Published : May 9, 2023, 6:46 AM IST

சென்னை:உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் 'மாமன்னன்' திரைப்பட வெளியீட்டுக்கான பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் மற்றும் வடிவேலு உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் இப்படத்தின் காட்சிகளை தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த நிலையில், மாமன்னன் படத்திற்காக பாடலாசிரியர் யுகபாரதி வரிகளில் உருவான ஒரு பாடலை வடிவேலு பாடி உள்ளார். இந்த பாடல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இயக்குநர் மாரி செல்வராஜ், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் வடிவேலு உள்பட சிலர் ஸ்டூடியோவில் இருக்கும் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டு, இதனை உறுதிபடுத்தி உள்ளது. முன்னதாக, 80, 90களில் வடிவேலு பாடிய பாடல்கள் மெகா ஹிட் அடித்தாலும், சமீபத்தில் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் வடிவேலு பாடிய பாடல், பெரிதளவு வரவேற்பை அடையவில்லை.

இந்த நிலையில், மாமன்னன் படத்தில் வடிவேலு பாடிய பாடல் ஹிட் அடிக்குமா என பொறுத்திருந்து பார்க்கலாம். மேலும், இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் மாமன்னன் திரைப்படத்தின் படத்தொகுப்பை ஆர்கே செல்வா மேற்கொள்கிறார். அதேபோல், குமார் கங்கப்பன் கலை இயக்குனராகவும், திலீப் சுப்பராயன் சண்டைப் பயிற்சியையும், சாண்டி நடன இயக்குனராகவும் பணிபுரிகின்றனர்.

அதேநேரம், சமீபத்தில் வெளியான மாமன்னன் படத்தின் போஸ்டர்கள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை தூண்டி உள்ளது. இந்த திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:PS 2: மணிரத்னம் இப்படி செய்தது வருத்தம் தான் - இயக்குநர் மோகன் ஜி!

ABOUT THE AUTHOR

...view details