சென்னை:சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடித்து வரும் திரைப்படம் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்'. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது.
பல ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் வைகை புயல் வடிவேலு நடிக்கும் படம் என்பதால் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இப்படத்தில் இருந்து பிரபுதேவா நடனம் அமைத்திருந்த 'அப்பத்தா' என்ற பாடல் சமீபத்தில் வெளியானது.