தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

Mamannan: 'மாமன்னன்' திரைப்படத்தின் அடுத்த அப்டேட்! - உதயநிதி ஸ்டாலின்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் 'மாமன்னன்' திரைப்படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Udayanidhi
உதயநிதி

By

Published : Jun 15, 2023, 12:43 PM IST

சென்னை:இயக்குநர் மாரி செல்வராஜ் 'பரியேறும் பெருமாள்' படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக தடம் பதித்தார். பெரிய எதிர்பார்ப்புகள் இன்றி வெளிவந்த அப்படம், வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மேலும், வித்தியாசமான கதைக் களத்தின் மூலம் பரவலாக அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

பரியேறும் பெருமாளின் வெற்றியால், மாரி செல்வராஜுக்கு நடிகர் தனுஷை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி, தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கிய கர்ணன் திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த இரண்டு படங்களிலும் சாதியக் கொடுமைகளையும், தாழ்த்தப்பட்ட எளிய மக்களின் வாழ்வியலையும் காண்பித்திருந்தார் இயக்குனர் மாரி செல்வராஜ்.

இவர் தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் "மாமன்னன்" படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படமே உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் கடைசி படம் என்றும் கூறப்படுகிறது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், பிரபல மலையாள நடிகர் ஃபகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும், இப்படத்தில் சிறப்பம்சமாக, முற்றிலும் மாறுபட்ட தோற்றத்துடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் வடிவேலு நடித்துள்ளார். இப்படத்திற்கு ஏஆர் ரகுமான் இசை அமைத்துள்ளார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் புகைப்படங்கள் அண்மையில் வெளியாகி, வரவேற்பை பெற்றன. அதேபோல், வடிவேலு குரலில் வெளியான "ராசா கண்ணு" என்ற பாடலும் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 1ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்நிலையில், மாமன்னன் படத்தின் டிரெய்லர் நாளை(ஜூன் 16) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. படம் இந்த மாதம் இறுதியில் வெளியாக உள்ளது. உதயநிதி ஸ்டாலினின் கடைசி படம் என்பதாலும், மாரி செல்வராஜ் இயக்கம் என்பதாலும் இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வடிவேலுவின் தோற்றமும் வித்தியாசமாக இருப்பதால் நிச்சயம் இது வெற்றிப்படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த படத்திலும் எளிய மக்களின் வாழ்வியலை மாரி செல்வராஜ் பேசி இருப்பார் என்றும், இது ஒரு உண்மை சம்பவமாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. ஏனென்றால், இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ், தேவர் மகன் படத்தில் வரும் இசக்கி கதாபாத்திரம்தான் இப்படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரம் என்று கூறியிருந்தார். இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: ஜூன் 16ல் ZEE5 ஓடிடியில் வெளியாகும் 'தமிழரசன்' திரைப்படம்!

ABOUT THE AUTHOR

...view details