கல்கியின் நாவலை கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள “பொன்னியின் செல்வன்” திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இத்திரைப்படத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி நடித்துள்ளனர். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
மேலும் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
பொன்னியின் செல்வன் படத்துக்காக ட்விட்டர் பக்கத்தின் பெயரை மாற்றிய த்ரிஷா, விக்ரம் படக்குழுவினர் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு கட்டமாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தின் பெயரை ’குந்தவை’ என மாற்றியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் விக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தின் பெயரை ’ஆதித்த கரிகாலன்’ என மாற்றியுள்ளார்.
இதையும் படிங்க: 'விரைவில் இனிப்பு செய்தியோடு உங்களை சந்திக்கிறேன்' - டி.ராஜேந்தர்