தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

'விரைவில் ரசிகர்களை சந்திப்பார் டி.ஆர்..!' - சிம்பு - டி ராஜேந்திரன் மருத்துவமனையில் அனுமதி

இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்திரன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் நலமாக உள்ளார் எனவும், விரைவில் ரசிகர்களை சந்திப்பார் எனவும் அவரது மகனும் நடிகருமான சிலம்பரசன் அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்துள்ளார்.

’விரைவில் ரசிகர்களை சந்திப்பார் டி.ஆர்..!’ - சிம்பு
’விரைவில் ரசிகர்களை சந்திப்பார் டி.ஆர்..!’ - சிம்பு

By

Published : May 24, 2022, 5:45 PM IST

நடிகரும் இயக்குநருமான டி.ராஜேந்திரன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகி வந்தன. இதனையடுத்து, இன்று(மே 24) அவரின் மகனும் நடிகருமான சிலம்பரசன் தன் தந்தை நலமாக இருப்பதாகவும், கூடிய விரைவில் அனைவரையும் சந்திப்பார் எனவும் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், “ஆருயிர் ரசிகர்களுக்கும் , அன்பான பத்திரிகை , ஊடக நண்பர்களுக்கும் வணக்கம். எனது தந்தைக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு பரிசோதனையில், அவருக்கு வயிற்றில் சிறிய ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு உயர் சிகிச்சை தரவேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அவர் உடல் நலன் கருதியும், உயர் சிகிச்சைக்காகவும் , தற்போது வெளிநாட்டுக்கு அழைத்துச்செல்கிறோம்.

அவர் முழு சுய நினைவுடன் , நலமாக உள்ளார். கூடிய விரைவில் சிகிச்சை முடிந்து, உங்கள் அனைவரையும் சந்திப்பார். உங்கள் பிரார்த்தனைகளுக்கும், அனைவரின் அன்புக்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்லும் டி.ராஜேந்தர்

ABOUT THE AUTHOR

...view details