தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

'துணிவு' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! - latest tamil news

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள 'துணிவு' திரைப்படம் வரும் ஜனவரி 11ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

'துணிவு' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
'துணிவு' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

By

Published : Jan 4, 2023, 8:33 PM IST

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ள திரைப்படம் ’துணிவு’. இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, பக்ஸ், ஜான் கொக்கேன், பட்டிமன்றங்களில் பேசி வந்த மோகன சுந்தரம் எனப் பலர் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. அதன் பின்னர் ட்ரெய்லர் அப்டேட் வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் புத்தாண்டிற்கு முதல் நாள் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. ட்ரெய்லரில் அஜித்தின் மாஸான தோற்றம் மற்றும் ட்ரெய்லரில் வரும் மாஸான காட்சிகளை ரசிகர்கள் கொண்டாடி, ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

துணிவு படம் பொங்கலுக்கு வெளியாகிறது என அறிவிக்கப்பட்டு இருந்தாலும், தெளிவான தேதி வெளியிடப்படாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் படம் வரும் ஜனவரி 11ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மேலும் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

முன்னதாக ஹெச்.வினோத் - அஜித் ஆகியோரது கூட்டணியில் உருவான இந்தி படமான பிங் பட ரீமேக்கான ‘நேர்கொண்ட பார்வை’ மற்றும் ’வலிமை’ ஆகிய திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றன. அதிலும் இறுதியாக வெளியான வலிமை பெரிதாக விமர்சிக்கப்பட்டது. இதனால் 'துணிவு’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும் இப்படத்துடன் விஜய் நடித்துள்ள 'வாரிசு’ திரைப்படமும் வெளியாக உள்ளது. இறுதியாக கடந்த 2014ஆம் ஆண்டு பொங்கலுக்கு விஜய்யின் ஜில்லா மற்றும் அஜித்தின் வீரம் ஆகிய படங்கள் ஒன்றாக வெளியாகின. அதனைத்தொடர்ந்து 9 ஆண்டுகள் கழித்து மீண்டும் இருவரது படங்களும் வெளியாவதால் இருதரப்பு ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

இரு படங்களின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது ’துணிவு’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ’வாரிசு’ படம் வரும் 12ஆம் தேதி வெளியாகவுள்ளதாக சமூக வலைதளங்களில் வைரலாகப் பேசப்பட்டு வருகிறது. மேலும் இரு படங்களும் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் தற்போது வரை டிக்கெட் புக்கிங் தொடங்கப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:திருப்பதி பிரதர்ஸ் உடன் மீண்டும் இணையும் கமல் ஹாசன்

ABOUT THE AUTHOR

...view details