தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

நாளை வெளியாகிறது தனுஷின் 'திருச்சிற்றம்பலம்' டிரைலர் - movie trailer

தனுஷ் நடித்துள்ள 'திருச்சிற்றம்பலம்' படத்தின் டிரைலர் நாளை வெளியாகவுள்ளது.

நாளை வெளியாகிறது தனுஷின் 'திருச்சிற்றம்பலம்' டிரைலர்
நாளை வெளியாகிறது தனுஷின் 'திருச்சிற்றம்பலம்' டிரைலர்

By

Published : Aug 6, 2022, 1:05 PM IST

நடிகர் தனுஷ் நடிப்பில், 'யாரடி நீ மோகினி', 'குட்டி' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'திருச்சிற்றம்பலம்' படத்தின் டிரைலர் நாளை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தில், நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், இயக்குநர் பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இப்படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் மூலம் உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார். அனிருத் இசையில் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், படத்தின் டிரைலர் நாளை வெளியாகவுள்ளதை ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படிங்க:'செல்வாக்கு உள்ளவர்களுக்கே இங்கு ஏணி கிடைக்கிறது..!' - ஆதங்கத்தில் ஆத்மிகா

ABOUT THE AUTHOR

...view details