சென்னை: தமிழில் 'துள்ளுவதோ இளமை' படத்தில் தொடங்கி ஹாலிவுட் வரை சென்றவர் நடிகர் தனுஷ். எந்தக் கதாப்பாத்திரம் கொடுத்தாலும் தனது அசராத நடிப்பினால் ரசிகர்களைக் கவரக்கூடிய ஆற்றலைக் கொண்டவராக வலம் வருகிறார். இவருக்கு கிடைத்த தேசிய விருது நடிப்புலகில் இவருக்கு கிடைத்த அங்கீகாரம் எனலாம்.
இவரது நடிப்பில் உருவாகிய நானே வருவேன், திருச்சிற்றம்பலம் படங்கள் விரைவில் திரைக்கு வர உள்ளன. இதில் தனுஷின் 44ஆவது படமான திருச்சிற்றம்பலம் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் அனிருத் இசையிலும் உருவாகியுள்ளது. இதில் நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், இயக்குநர் பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
படப்பிடிப்பு வேலைகள் முடிந்த நிலையில், இதன் தயாரிப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இதனிடையே சன் பிக்சர்ஸ் படத்தின் கேரக்டர்கள் அடங்கிய போஸ்டர்களை வெளியிட்டுவருகிறது.