தெலுங்கு சினிமாவில் தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து பின் நடிகையாக மாறியவர் தான், நடிகை அனசுயா பரத்வாஜ். இவர் இயல்பிலேயே மனதில் தோன்றுவதைப் பட்டென்று பேசிவிடும் குணம் உள்ளவராம். இந்நிலையில், இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்து வெளியான ’லைகர்’ படம் எதிர்பார்த்த அளவு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெறாது இருந்து வரும் நிலையில், அதைத் தாக்கும் வண்ணம் அது குறித்து பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
அதில், ‘கர்மா என்றும் திரும்பி வந்தே சேரும். தாயின் வலி என்றும் போகாது. கர்மா சில நேரம் வரக் கால அவகாசங்கள் நீடித்தாலும் கட்டாயம் வந்து சேரும்..! யாருடைய சோகத்திலும் மகிழ்ச்சி இல்லை. ஆனால் நம்பிக்கை வீண்போகவில்லை’ எனப் பதிவிட்டுள்ளார்.
இவருக்கு நடிகர் விஜய்தேவரகொண்டா நடிப்பில் வெளியான அர்ஜூன் ரெட்டி படத்தின் புரொமோசனில் அவர் பேசிய சில வார்த்தைகளில் கருத்து வேறுபாடு இருந்ததாகவும், அந்த வன்மத்தை தற்போது தீர்த்துக்கொண்டதாகவும் தெலுங்கு திரையுலக வட்டாரங்களும், ரசிகர்களும் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், நடிகர் விஜய்தேவரகொண்டா ரசிகர்களாலும், மற்றும் பல நெட்டிசன்களாலும் தற்போது ’ஆண்டி’ எனக் கிண்டல் செய்யப்பட்டு வருகிறார், நடிகை அனசுயா. இதனால் கோபத்திற்குள்ளான அனுசுயா சமூக வலைதளங்களிலேயே தன்னைப் பற்றி வரும் கிண்டல் மீம்ஸ்களுக்கு பதில் பதிவிட்டும், தற்போது காவல்துறையினரிடம் தன் வயதை வைத்து கேலி செய்கிறார்கள் எனப் புகார் ஒன்றும் அளித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
இதையும் படிங்க: Thalaivar 170... ரஜினியுடன் இணையும் அடுத்த இளம் இயக்குநர்..