சென்னை: இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிக்கும், ‘கேப்டன் மில்லர்’ படத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் சந்தீப் கிஷன் இணைந்துள்ளார். சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகும் “கேப்டன் மில்லர்” திரைப்படத்தில்,சந்தீப் கிஷன் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தனுஷ் நடிக்கும் “கேப்டன் மில்லர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் மிகப்பெரும் வரவேற்பை பெற்றதுடன், இதுவரையிலான தமிழ் திரைப்படங்கள் பெற்றிடாத எண்ணிக்கையில், பார்வைகளை பெற்று சாதனை படைத்தது. முன்னணி நடசத்திரம், பிரபல தொழில் நுட்ப கலைஞர்களுடன் இப்படம் தற்போதே ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில் அடுத்த கட்டமாக ஆவலை இன்னும் கூட்டும் வகையில், தெலுங்கு திரையுலகின் பிரபல முன்னணி நடிகர் சந்தீப் கிஷன் இப்படத்தில் முக்கியமான பாத்திரத்தில் இணைந்துள்ளார். தெலுங்குத் திரையுலகில் தனது தொடர்ச்சியான வெற்றிகள் மூலம், முன்னணி பிரபலமாக, வெற்றிகரமான கமர்சியல் நடிகர்களில் ஒருவராகப் புகழ் பெற்றவர் நடிகர் சந்தீப் கிஷன்.