தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

எதிரிதான் தேடி வருவான்.. தனி ஒருவன் 2 படத்தின் மிரள வைக்கும் அப்டேட்!! - எதிரிதான் உன்ன தேடி வருவான்

Thani Oruvan 2: மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் வெளியான தனி ஒருவன் படத்தின் அடுத்த பாகமான தனி ஒருவன் 2 படத்தின் அப்டேடை வெளியிட்டுள்ளது ஏஜிஎஸ் நிறுவனம்.

thani oruvan 2
தனி ஒருவன் 2

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 28, 2023, 10:34 PM IST

Updated : Aug 29, 2023, 11:28 AM IST

சென்னை:நடிகர் ஜெயம் ரவி, அரவிந்த்சாமி மற்றும் நயன்தாரா ஆகியோர் நடிப்பில், 2015 ஆம் ஆண்டு வெளியான படம் "தனி ஒருவன்". இப்படத்தில் அரவிந்த்சாமி மற்றும் ஜெயம் ரவி ஆகியோரின் மாறுபட்ட நடிப்பு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

குறிப்பாக அப்படத்தில் ஜெயம் ரவி, அரவிந்த்சாமி இருவரும் எதிர் எதிர் கதாபாத்திரங்கள் நடித்திருப்பார்கள். அவர்களின் இரண்டு கதாபாத்திரங்களும் பேசிக் கொள்ளும் வசனங்களும், படத்தின் பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இப்படம் வெளியாகி 8 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் தற்போது "தனி ஒருவன் 2" படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

இது குறித்த அறிவிப்பை ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும் படத்தின் அப்டேட் குறித்த பதிவைப் படத்தின் இயக்குநர், நடிகர் ஜெயம் ரவியின் சகோதர் மோகன் ராஜா மற்றும் ஜெயம் ரவி தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். மேலும் படத்தின் அப்டேட் குறித்து ஏஜிஎஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: Jason Sanjay: இயக்குநராக அறிமுகமாகும் விஜய்யின் மகன் ஜாசன் சஞ்சய்.. லைகா நிறுவனம் வெளியிட்ட முக்கிய அப்டேட்!

Last Updated : Aug 29, 2023, 11:28 AM IST

ABOUT THE AUTHOR

...view details