தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

நடிகர் விக்ரமின் தங்கலான் திரைப்பட ரிலீஸ் தேதி அறிவிப்பு! - மாளவிகா மோகனன்

Thangalaan release date: தங்கலான் திரைப்படம் வரும் ஜனவரி 26ஆம் தேதி வெளியாகும் எனவும், டீசர் வரும் நவம்பர் 1ஆம் தேதி வெளியாகும் என நடிகர் விக்ரம் தனது சமூக வலைதல பக்கத்தில் அறிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 27, 2023, 6:03 PM IST

சென்னை:ஸ்டுடியோ கிரீன் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம், மாளவிகா மோகனன், பசுபதி, பார்வதி உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘தங்கலான்’. கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட கஷ்டங்களை முக்கிய கருவாக கொண்டு தங்கலான் திரைப்படம் தயாராகி வருகிறது.

இந்த படத்தில் புரோமோ வீடியோ சில மாதங்களுக்கு முன் வெளியானது முதல் இந்த படத்திற்குத் தமிழ் சினிமாவில் எதிர்பார்ப்பு அதிகரித்தது. மிகப்பெரும் பொருட்செலவில் தயாராகி வரும் தங்கலான் படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார்.

ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கெட்டப்பில் நடிப்பில் கலக்கி வரும் சியான் விக்ரம் இந்த படத்திலும் உடல் மெலிந்து வித்தியாசமான கெட்டப்பில் நடித்துள்ளார். தங்கலான் திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், இன்று தங்கலான் திரைப்படம் அடுத்த வருடம் ஜனவரி 26ஆம் தேதி வெளியாகும் என சியான் விக்ரம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளார்.

மேலும் தங்கலான் படத்தின் டீசர் வரும் நவம்பர் 1ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தங்கலான் திரைப்படம் விக்ரம் சினிமா வாழ்க்கையில் முக்கிய மைல்கல்லாக இருக்கும் என கோலிவுட்டில் பேசப்படுகிறது.

இதையும் படிங்க: வசூலில் ஆதிக்கம் செலுத்துகிறதா 'லியோ' - 8 நாட்களில் இந்திய வசூல் நிலவரம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details