இந்திய சினிமாவின் பெருமை என போற்றப்படுபவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இவர் தற்போது சிவகார்த்திகேயனின் அயலான், பத்து தல, மாமன்னன், லால் சலாம் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
இவர் கடந்த ஆண்டு வெளியான 99 சாங்ஸ் என்ற படத்தை கதை எழுதி தயாரித்தும் உள்ளார். இதனை தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது விர்ச்சுவல் ரியாலிட்டி முறையில் உருவாக்கப்பட்ட லீ மஸ்க் என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார்.
ஏ. ஆர். ரஹ்மான் இயக்கிய குறும்படத்தை பார்த்து ரசித்த ரஜினிகாந்த் இப்படம் சமீபத்தில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இதனை பார்த்த பலரும் பாராட்டியுள்ளனர். இப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் நேற்று விர்ச்சுவல் ரியாலிட்டி முறையில் பார்த்து ரசித்தார். அந்த புகைப்படத்தை ஏ.ஆர்.ரஹ்மான் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: சந்திரமுகியாக நடிக்கும் கங்கனா ரனாவத்..!