சென்னை: தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை, தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கரில், வெற்றி பெற்ற சிறுவன் கிருஷாங் சந்தித்து வாழ்த்துபெற்றார்.
பின்னர் இந்த சந்திப்பு குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய சிறுவன் கிருஷாங், ”தமிழ்நாடு முதலமைச்சரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் அடிக்கடி சாலையில் செல்லும்பொழுது, அவருடைய கான்வாயை பார்த்து நான் மிகவும் ரசிப்பேன். அவ்வப்போது சாலையில் செல்லும் முதலமைச்சருக்கு கை காண்பிப்பேன், அதற்குப் பதிலாக முதலமைச்சரும் பல நேரங்களில் கையை அசைத்துச் செல்வார்.