நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் செப்டம்பர் 17ஆம் தேதி வெளியான கொரியன் வெப் சீரிஸ் 'ஸ்குவிட் கேம்'. ஹ்வாங் டாங் - ஹியூக் இயக்கிய இந்தத் தொடர் குழந்தைகள் விளையாடும் விளையாட்டை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது.
இந்த வெப் சீரிஸ் 9 எபிசோடுகளாக வெளியானது. இந்த வெப் சீரிஸ் வெளியான 17 நாள்களில் 111 மில்லியன் பார்வையாளர்கள், இந்தத் தொடரைப் பார்த்து ரசித்தனர். இதனால் 'ஸ்குவிட் கேம்' நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் 100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த முதல் தொடராக மாறியது.
இந்நிலையில் இதற்கு முன்னதாகவே இதன் இரண்டாம் பாகம் வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில் விரைவில் வெளியாக உள்ளதாக 'ஸ்குவிட் கேம்'-ன் இயக்குநர் அறிவித்துள்ளார்.
'ஸ்குவிட் கேம்' முதல் பாகத்தை திரைக்கு கொண்டுவர 12 ஆண்டுகளானது. ஆனால் வெளியான 12 நாட்களிலேயே நெட்ஃபிளிக்ஸின் மிகப்பிரபலமான தொடராக மாறியது.தொடரின் எழுத்தாளர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என்ற முறையில் தொடரைப் பார்த்த ரசிகர்களுக்கு என் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். 'ஸ்குவிட் கேம்' விரைவில் வெளியாக உள்ளது.
இன்னும் ஒரு புதிய சுற்றுக்கு எங்களுடன் சேருங்கள்’ என்று 'ஸ்குவிட் கேம்' தொடரின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஹ்வாங் டாங் - ஹியூக் தெரிவித்துள்ளார். மேலும் இரண்டாவது சீசன் வரும் 2023-ன் இறுதியில் அல்லது 2024-ன் தொடக்கத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க:சீனு ராமசாமி, GV பிரகாஷ் கூட்டணியில் உருவாகியுள்ள 'இடி முழக்கம்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!