வம்சி இயக்கத்தில் தில் ராஜூ தயாரிப்பில் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'வாரிசு' (Varisu). இப்படத்திற்கு தமனின் இசை அமைத்துள்ளார். ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகி பாபு உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 11ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
இந்தியாவில் இந்த படத்தின் வெளியீட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், வெளிநாடுகளில் குறித்த தேதியில் வாரிசு திரைப்படம் வெளியாகுமா? என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், வாரிசு திரைப்படம் முதலில் ஜனவரி 12-ஆம் தேதி தான் வெளியாவதாக இருந்தது. இதனால் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் 11ஆம் தேதி சிறப்பு காட்சிகளுக்கான புக்கிங் தொடங்கியது.
அங்குள்ள ரசிகர்களும் அதே தேதிக்கு டிக்கெட் புக் செய்திருந்தனர். ஆனால், இரவோடு இரவாக தயாரிப்பு தரப்பு ரிலீஸ் தேதியை 11ஆம் தேதிக்கு மாற்றியது. இதனால், சிறப்பு காட்சிகளை 10ஆம் தேதியே போட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.இதனால், அடுத்த நாளுக்கு டிக்கெட் புக் செய்தவர்கள் 10ஆம் தேதிக்கு மாற்றப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டது.