தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

பேலியோ டயட்டால் மோசமான உடல்நிலை... சீரியல் நடிகர் பரத்தின் மனைவி உயிரிழப்பு! - பரத்தின் மனைவி பிரியா உயிரிழந்தார்

பிரபல சின்னத்திரை நடிகர் பரத்தின் மனைவி பிரியா உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்.

சின்னத்திரை நடிகர் பரத்தின் மனைவி பிரியா உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்
சின்னத்திரை நடிகர் பரத்தின் மனைவி பிரியா உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்

By

Published : Oct 31, 2022, 10:04 PM IST

Updated : Oct 31, 2022, 11:07 PM IST

மறைந்த பழம்பெரும் நடிகர் கல்யாண் குமாரின் மகன் பரத் கல்யாண். சினிமா, சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் ஜென்டில்மேன், ஆதிலட்சுமி புராணம் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தற்போது தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாரதி கண்ணம்மா' தொடரில் பரத் நடித்து வருகிறார்.

அவரது மனைவி பிரியா (43) . இன்று உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தார். பிரியாவுக்கு ஏற்கெனவே சர்க்கரை வியாதி இருந்துள்ளது. அதற்கு சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் உடல் எடையைக்குறைக்க பேலியோ டயட் இருந்துவந்துள்ளார். இதனால் அவரது உடல்நிலை மோசமானது.

பிரியா கடந்த மூன்று மாதங்களாக உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு அவரது உயிர் பிறந்தது. நாளை பிரியாவின் இறுதி ஊர்வலம் நடைபெற உள்ளது. பிரியாவின் மறைவுக்கு சின்னத்திரை நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:அமீர் கானின் தாயாருக்கு மாரடைப்பு

Last Updated : Oct 31, 2022, 11:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details