நடிகர் சிவகார்த்திகேயன், அவர் நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை இன்று(ஜூன் 9) அவரின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் நடிக்கும் 20ஆவது திரைப்படமான இந்தத் திரைப்படத்திற்கு ‘பிரின்ஸ்’ எனப் படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.
இந்தப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு ‘டூரிஸ்ட் கைடு’ கதாபாத்திரத்தில் வரவிருப்பதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், இன்று வெளியாகியிருக்கும் இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் கையில் உலக உருண்டையுடன் போஸ் கொடுத்துள்ளார், எஸ்.கே. மேலும் இவர் படத்தின் பின்னணியில் உலக வரைபடம் வெள்ளை நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.