தமிழ்நாடு

tamil nadu

SK 22: சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேரும் பாலிவுட் நடிகை..!

By

Published : May 27, 2022, 10:23 PM IST

'SK 22' -இல் சிவகார்த்திகேயன் ’மண்டேலா’ பட இயக்குநர் மடோன் அஸ்வினுடன் இணையவிருக்கிறார். இந்நிலையில், அந்தப்படத்தின் கதாநாயகி யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

SK 22: சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேரும் பாலிவுட் நடிகை..!
SK 22: சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேரும் பாலிவுட் நடிகை..!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘SK 22'இன் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ’கியாரா அத்வானி’-யை அப்படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்களான ’டாக்டர்’ மற்றும் ‘டான்’ பெரும் வெற்றியைப் பெற்றது. குறிப்பாக கடைசியாக வெளியான ’டான்’ திரைப்படம் ரூ.100 கோடி ரூபாய் வசூல் செய்து மாபெரும் வெற்றிபெற்ற நிலையில், தற்போது இந்தப் புதிய படத்தில் பாலிவுட் நடிகையுடன் ஜோடியாக நடிக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், இவர் நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் எடுக்கும் படத்திலும் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Vikram promo: 'விக்ரமை அழைக்கும் பஞ்சதந்திரம் கேங்..!' : கலக்கல் புரொமோ

ABOUT THE AUTHOR

...view details