தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

அமெரிக்க பாக்ஸ் ஆபீஸில் ஒரு மில்லியன் டாலர் கிளப்பில் இணைந்த சீதா ராமம் - சீதா ராமம் திரைப்படம்

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் சமீபத்தில் வெளியான சீதா ராமம், திரைப்படம் அமெரிக்க பாக்ஸ் ஆபீஸில் ஒரு மில்லியன் டாலர் கிளப்பில் இணைந்து வசூல் சாதனைப் படைத்துள்ளது.

அமெரிக்க பாக்ஸ் ஆபீஸில் ஒரு மில்லியன் டாலர் கிளப்பில் இணைந்த ‘சீதா ராமம்’
அமெரிக்க பாக்ஸ் ஆபீஸில் ஒரு மில்லியன் டாலர் கிளப்பில் இணைந்த ‘சீதா ராமம்’

By

Published : Aug 15, 2022, 7:32 PM IST

Updated : Aug 15, 2022, 7:48 PM IST

சென்னை: துல்கர் சல்மான் மற்றும் மிருணாள் தாக்கூர் ஆகியோர் நடிப்பில் வெளியான ‘சீதா ராமம்’ திரைப்படம் அமெரிக்க பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனையைப் படைத்திருக்கிறது. இந்தத் திரைப்படம் கடந்த ஞாயிறன்று நடைபெற்ற முன்பதிவுடன் ஒரு மில்லியன் டாலர்களை வசூலித்து, புதிய வசூல் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது.

உலகம் முழுவதிலும் உள்ள பார்வையாளர்களின் இதயங்களை வென்ற ‘சீதா ராமம்’ வெளியான முதல் வாரத்தில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் சிறப்பான வசூல் சாதனையைப் பதிவு செய்திருக்கிறது. புதிய திரைப்படங்களின் வெளியீடுகள் இருப்பினும், ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு, கேரளம் என அனைத்துப் பகுதிகளிலும் இரண்டாவது வாரத்திலும் சிறப்பான வசூலை ஈட்டி வருகிறது.

மேலும், சுதந்திர தின விடுமுறையான இன்றும் இப்படத்தில் வசூல் வேட்டை தொடரும் எனத் திரையுலக வணிகர்கள் தெரிவிக்கிறார்கள். ஒரு தரமான படைப்பிற்கு, மக்களின் ஆதரவு என்றென்றும் உண்டு என்பது, ‘சீதா ராமம்’ படத்தின் வசூல் மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

போருக்கு இடையில் நடைபெறும் காதல் கதையின் உணர்ச்சிகரமான பயணம் ரசிகர்களுக்குத் தனித்துவமான அனுபவத்தை அளித்திருக்கிறது. விமர்சகர்களும், பார்வையாளர்களும் இந்தக் காவிய காதல் படைப்பை ரசித்து வருகிறார்கள். அண்மையில் விமர்சனத்தையும், வசூலையும் ஒருமித்து பெற்ற படைப்பு என்றால் அது ‘சீதா ராமம்’ மட்டும் தான் என்பது, ரசிகர்கள் அளித்து வரும் தீர்ப்பு.

இதையும் படிங்க: நடிகர் பிரபாஸின் ‘சலார்’ ரிலீஸ் தேதி வெளியீடு

Last Updated : Aug 15, 2022, 7:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details