சென்னை:தமிழ் சினிமாவில் உள்ள இசையமைப்பாளர்களில் கிராமத்து கதைகளுக்கு இசையமைப்பதில் பெயர் பெற்றவர் இமான். மேலும் தனது மெலடி பாடல்களின் மூலம் அனைவரையும் கட்டிப் போடும் வித்தைக்காரர். இவரது படங்களில் குத்து பாடல்கள் இருந்தாலும் மெலடி பாடல்கள் தனித்துவம் வாய்ந்த ஒன்று.
அது மட்டுமின்றி குறிப்பிட்ட பாடகர்களை அழகாக பயன்படுத்துவதிலும் இமான் வல்லவர். அப்படி இமான் இசையில் பாடகி ஸ்ரேயா கோஷல் பாடிய அனைத்து பாடல்களுமே ரசிகர்கள் மனதை கவர்ந்தவை. உன்ன விட்டா யாரும் எனக்கில்ல, மிருதா மிருதா, போன உசுரு வந்துருச்சு, சொல்லிட்டாளே அவ காதல, ஒன்னபோல ஒருத்தன, கண்ண காட்டுபோதும், சார காற்றே, வானே வானே என சொல்லிக் கொண்டே போகலாம்.
பார்த்திபன் படத்தில் இணைந்த இமான் - ஸ்ரேயா கோஷல் எவர்கிரீன் ஹிட் காம்போ இந்நிலையில் தற்போது பார்த்திபன் இயக்கி நடித்து வரும் புதிய படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார். இந்த படத்திலும் ஸ்ரேயா கோஷல் ஒரு பாடல் பாடியுள்ளார். இதுகுறித்து இமான் தனது சமூக வலைதள பக்கத்தில், ”பார்த்திபன் படத்தில் ஸ்ரேயா கோஷல் பாடிய பாடலை பதிவு செய்துள்ளோம். அவரது மேஜிக்கல் குரலில் இந்த பாட்டு வந்துள்ளது.
பார்த்திபன் படத்தில் இணைந்த இமான் - ஸ்ரேயா கோஷல் எவர்கிரீன் ஹிட் காம்போ உங்களிடமும் உங்கள் குடும்பத்திடமும் கடவுள் உடனிருப்பார். உங்களிடம் இந்த பாடலை பகிர்ந்து கொள்வதற்கு காத்திருக்க முடியவில்லை. இப்பாடலை பார்த்திபனே எழுதியுள்ளார்" என குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே ஏ.ஆர். ரகுமான் இசையில் பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் படத்தில் மாயவா தூயவா பாடலை பாடியதற்காக ஸ்ரேயா கோஷலுக்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் யாராவது நன்றாக பாடுபவர்களின் வீடியோ வெளியானால் அவர்களை பாராட்டுவது மட்டுமின்றி, அவர்களை தனது இசையில் பாட வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார் இமான். சமீபத்தில் ஒரு பள்ளிச் சிறுமி அப்பா பற்றி பாடிய பாடல் சமூக வலைதளங்களில் வைரலானது.
இதனையடுத்து அந்த சிறுமியின் பெயர் மாற்றம் தொடர்பு எண்ணை பெற்று இமான் பாராட்டியுள்ளார். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திறமைகள் எங்கு இருந்தாலும் அதனை கண்டுபிடித்து அதற்கு உரிய அங்கீகாரம் கொடுப்பதில் இமான் எப்போதுமே சிறந்தவராக விளங்குகிறார்.
இதையும் படிங்க:"அந்த மனசுதான் சார் கடவுள்".. சமூக வலைத்தளத்தில் உதவி கேட்ட நபருக்கு உதவிய ஜி.வி பிரகாஷ்.. குவியும் பாராட்டுகள்!