தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

விரைவில் தொடங்கும் தளபதி 67 படப்பிடிப்பு... - master

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க உள்ளது.

விரைவில் தொடங்கும் தளபதி 67 படப்பிடிப்பு
விரைவில் தொடங்கும் தளபதி 67 படப்பிடிப்பு

By

Published : Dec 2, 2022, 12:26 PM IST

மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இருவரும் புதிய படத்தில் இணைய உள்ளனர். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இப்படததிற்கு தற்காலிகமாக தளபதி 67 என்று பெயரிடப்பட்டுள்ளது. படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இப்படத்திற்கான கதையை லோகேஷ் கனகராஜ் தயார் செய்து விட்டதாகவும், இதுவும் கேங்ஸ்டர் படம்தான் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படமும் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸில் (LCU) வருமா என்றும் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இப்படத்தில் சஞ்சய் தத், கௌதம் மேனன், மிஷ்கின் மற்றும் முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. இப்படத்தின் பூஜை இம்மாதம் 5ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் 15 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

’தளபதி 67’ குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ட்ரெய்லர் வெளியீடு - ரசித்து பார்த்த வடிவேலு!

ABOUT THE AUTHOR

...view details