தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

தனுஷ் ரசிகர்கள் அதகளம்... ரோகிணி திரையரங்கில் ஸ்கிரீன் கிழிப்பு... - தாய்க்கிழவி

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் இன்று(ஆக.18) திரையரங்குகளில் வெளியான திருச்சிற்றம்பலம் படம் திரையிடப்பட்ட ரோகிணி திரையரங்கின் ஸ்கிரீனை தனுஷ் ரசிகர்கள் கிழித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனுஷ் ரசிகர்கள் அட்டகாசம்..., ரோகிணி திரையரங்கில் ஸ்கிரீன் கிழிப்பு...,
தனுஷ் ரசிகர்கள் அட்டகாசம்..., ரோகிணி திரையரங்கில் ஸ்கிரீன் கிழிப்பு...,

By

Published : Aug 18, 2022, 8:23 PM IST

இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் திருச்சிற்றம்பலம். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. அனிருத் இசை அமைத்துள்ளார். நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படம் இன்று(ஆக.18) திரையரங்குகளில் வெளியானது. ’கர்ணன்’ படத்திற்குப் பிறகு திரையரங்குகளில் வெளியாகியுள்ள தனுஷ் படம்‌ என்பதால் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாடெங்கும் உள்ள திரையரங்குகளில் காலை முதலே ஆட்டம் பாட்டம் என்று அதகளப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று(ஆக.18) சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் காலை காட்சி திரையிடப்பட்டது. ரசிகர்கள் உற்சாகத்தில் ஆடிப்பாடி கொண்டாடினர். இப்படத்தை தனுஷ் மற்றும் அனிருத் இருவரும் ரசிகர்கள் உடன் இணைந்து பார்த்தனர்.

இதனைத்தொடர்ந்து இரண்டாவது காட்சி போடப்பட்டது. அப்போது ’தாய்க்கிழவி’ என்ற‌ பாடல் ஒளிபரப்பானபோது ரசிகர்கள் உற்சாக மிகுதியில் திரையின் அருகே சென்று ஆடியுள்ளனர். அதில் எதிர்பாராத விதமாக ஸ்கிரீன் கிழிந்தது. இந்த செய்தி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

இந்தச் சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று திரையரங்க நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே இங்கு முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது கண்ணாடிகள் உடைவது, அடிதடி போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வெளியானது தனுஷின் திருச்சிற்றம்பலம்... ரசிகர்கள் கொண்டாட்டம்

ABOUT THE AUTHOR

...view details