தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

சசிகுமார் நடிக்கும் ’காமன் மேன்’ படத்தின் பெயர் மாற்றம்..! - நான் மிருகமாய் மாற

சசிகுமார் நடித்து தயாரான ‘காமன் மேன் ‘ படத்தின் டைட்டில் தற்போது மற்றப்பட்டுள்ளது.

சசிகுமார் நடிக்கும் ’காமென் மேன்’ படத்தின் பெயர் மாற்றம்..!
சசிகுமார் நடிக்கும் ’காமென் மேன்’ படத்தின் பெயர் மாற்றம்..!

By

Published : Jul 26, 2022, 4:31 PM IST

விஜய் ஆண்டனி நடித்த ‘கோடியில் ஒருவன்’ வெற்றிப்படத்தை தொடர்ந்து IT.D.ராஜா மற்றும் D.R.சஞ்சய் குமார் சார்பில் செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘காமன்மேன்’. சசிகுமார் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தை ‘கழுகு’ பட இயக்குநர் சத்யசிவா இயக்கியுள்ளார்.

ஹரிப்ரியா கதாநாயகியாக நடிக்க, விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜிப்ரான் இசையமைப்பில் உருவாகி வரும் இந்தப்படம் சசிகுமாரின் வழக்கமான படங்களின் பாணியில் இருந்து விலகி முற்றிலும் புதிய கதைக்களத்தில் தயாராகி வருகிறது.

இந்தப்படம் தொடங்கப்பட்டபோதே ‘காமன் மேன்’ என்கிற டைட்டில் வைக்கப்பட்டு அறிவிக்கப்பட்டாலும், இதே டைட்டிலை வேறு ஒரு நிறுவனம் தங்களது படத்திற்கு முன்கூட்டியே பதிந்துவிட்ட தகவல் பின்னர்தான் தெரிய வந்தது. இதனால் இந்தக்கதைக்கு பொருத்தமாக இருந்தாலும் ’காமன் மேன்’ என்கிற டைட்டிலை பயன்படுத்த முடியாத சூழல் உருவானது.

இந்நிலையில், இந்தப்படத்திற்கு ‘நான் மிருகமாய் மாற’ என புதிய டைட்டிலை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் வெளியீட்டிற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இதையும் படிங்க: படமாகும் சரவணபவன் அண்ணாச்சி வாழ்க்கை - இயக்குவது யார் தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details