தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

சந்தானம் நடிக்கும் புதிய படம்! - சந்தானத்தின் புதிய படம்

கன்னட இயக்குநரின் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படபிடிப்பு பெங்களூரில் பூஜையுடன் ஆரம்பமானது.

சந்தானம் நடிக்கும் புதிய படம்!
சந்தானம் நடிக்கும் புதிய படம்!

By

Published : Apr 27, 2022, 6:22 AM IST

பெங்களூர்:சந்தானம் கதானாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படபிடிப்பு பெங்களூரில் பூஜையுடன் ஆரம்பமானது. இப்படத்தை ஃபார்டியூன் பிலிம்ஸ் ( FORTUNE FILMS ) பட நிறுவனம் சார்பில் நவீன்ராஜ் பிரமாண்டமாக தயாரிக்கிறார். பெயரிடப்படாத இப்படத்தை 'புரொடக்‌ஷன் No10’ ( சந்தானம்15 ) ஆக தயாரிக்கிறார்கள்.

கதாநாயகனும், நாயகியும் வெவ்வேறு விளம்பர நிறுவனங்களில் வேலை செய்கிறார்கள். தொழில் முறை போட்டியில் எலியும் பூனையுமாக மோதிக் கொள்கிறார்கள். இவர்களுக்குள் நடைபெறும் தொழில் முறை யுத்தத்தை முழு நீள நகைச்சுவை படமாக 'சந்தானம்' பாணியில் டைரக்டர் உருவாக்குகிறார்.

தமிழ், கன்னட மொழிகளில் தயாராகும் இப்படத்தை கன்னட பிரபல டைரக்டர் பிரசாந்த்ராஜ் இயக்குகிறார். இவர் கன்னடத்தில் ஹிட்டான லவ்குரு, கானா பஜானா , விசில், ஆரஞ்ச் போன்ற படங்களை இயக்கி ஸ்டார் டைரக்டராக உள்ளார்.

இந்த படத்தில் சந்தானத்தின் ஜோடியாக 'தாராள பிரபு' படத்தில் நடித்த தான்யா ஹோப் ( tanya hope) நடிக்கிறார். மேலும், பாக்யராஜ், பிரமானந்தம், செந்தில், கோவை சரளா, மன்சூர் அலிகான், மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், வையாபுரி, முத்துகாளை, ராகிணி திவேதி, ஷகிலா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

சந்தானம் படங்களில் அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக இப்படம் தயாராகிறது.குடும்பத்துடன் ஜாலியாக கொண்டாடும் விதத்தில் கதை அமைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:'என்னை.., சங்குல எறக்குறேன்ன..?' : வெறித்தனமான 'சாணிக் காயிதம்' ட்ரெய்லர்!

ABOUT THE AUTHOR

...view details