லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியான 'விக்ரம்' திரைப்படம் பிரமாண்ட வெற்றியைப் பெற்றுள்ளது. அதனைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் விஜயை வைத்து தனது அடுத்த படத்தை இயக்க உள்ளார். விஜய் தற்போது இயக்குநர் வம்சி இயக்கத்தில் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார்.
அதனை முடித்துக்கொண்டு லோகேஷ் கனகராஜ் படத்தில் இணைகிறார். இப்படத்திற்கு தற்போது வரை ’தளபதி 67’ என பெயரிடப்பட்டது. இந்நிலையில், இப்படத்தில் நடிகை சமந்தா வில்லியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விஜய் கேங்ஸ்டர் வேடத்தில் நடிப்பதாகவும் போலீஸ் அலுவலரான சமந்தா அவருக்கு எதிரான வேடத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.