தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

வீரம்.. வித்தியாசமான லுக்கில் சல்மான் கான்! - pooja hegde

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தற்போது நடித்துவரும் கபி ஈத் கபி தீவாளி திரைப்படத்தின் புகைப்படத்தை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

வித்தியாசமான லுக்கில் சல்மான் கான்
வித்தியாசமான லுக்கில் சல்மான் கான்

By

Published : May 14, 2022, 6:33 PM IST

பாலிவுட் நடிகர் பாக்ஸ்ஆபிஸ் கிங் சல்மான் கான் தற்போது நடித்துவரும் “கபி ஈத் கபி தீவாளி” திரைப்படத்தின் புகைப்படத்தை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் தனது புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதாக அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் புகைப்படத்தில் சல்மான் கான் நீண்ட தலைமுடியுடன் கையில் இரும்பு கம்பியை பிடித்தபடி காணப்படுகிறார். சஜித் நதியத்வாலா தயாரிக்கும் இந்தத் திரைப்படத்தை ஃபர்ஹாத் சம்ஜி இயக்குகிறார். இந்த வருடத்தின் இறுதியில் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, கீர்த்தி சனோன் ஆகியோர் நடிக்கின்றனர்.

“கபி ஈத் கபி தீவாளி” இந்த வருட இறுதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சல்மான் கான் வெளியிட்ட புகைப்படத்தை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க: நேரு உள்விளையாட்டு அரங்கில் விக்ரம் இசை வெளியீட்டு விழா!

ABOUT THE AUTHOR

...view details