தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

காசுக்கு நடிக்க நான் தரங்கெட்டவன் கிடையாது... - நடிகர் ராமராஜன்! - நடிகர் ராமராஜன்

நடிகர் ராமராஜன் வெகு ஆண்டுகளுக்குப் பிறகு நடித்து தயாராகும் ‘சாமானியன்’ திரைப்படத்தின் டீஸர் வெளியீட்டு விழா நேற்று(செப்.19) சென்னையில் நடைபெற்றது.

’காசுக்கு நடிக்க நான் தரங்கெட்டவன் கிடையாது...!’ - நடிகர் ராமராஜன்!
’காசுக்கு நடிக்க நான் தரங்கெட்டவன் கிடையாது...!’ - நடிகர் ராமராஜன்!

By

Published : Sep 20, 2022, 4:24 PM IST

தமிழ்சினிமாவில் ஒரு காலகட்டத்தில் வசூல் மன்னனாக, வெள்ளி விழா நாயகனாகத் திகழ்ந்தவர் தான், நடிகர் ராமராஜன்.தொடர்ந்து பல வெற்றி படங்களைத் தமிழ் சினிமாவிற்குக் கொடுத்த இவர் சில காலத்திற்குப் பிறகு படங்கள் எதிலும் நடிக்காமல் இருந்தார். கடைசியாக இவர் நடிப்பில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான 'மேதை' திரைப்படம் தான் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம்.

அதன்பிறகு சில கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு வந்தபோதும், 'நடித்தால் ஹீரோவாகத் தான் நடிப்பேன்...!', என ஸ்ட்ரிக்ட்டாக இருந்ததால், 10 ஆண்டுகள் எந்தப் படத்திலும் நடிக்காமல் இருந்தார், நடிகர் ராமராஜன்.

இந்நிலையில், தற்போது அவரது நடிப்பில் இயக்குநர் ராகேஷ் இயக்கத்தில் ‘சாமானியன்’ எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் டீஸர் வெளியீட்டு விழா நேற்று(செப்.19) சென்னையில் நடைபெற்றது.

அதில் பேசிய நடிகர் ராமராஜன், 'நான் ஐந்து மொழிகளில் நடிப்பது இதுவே முதல்முறை. நடித்தால், ஹீரோவா தான் நடிப்பாராமே என்று சொல்கிறார்கள். அப்படி எல்லாம் இல்லை, நல்ல கதை இருந்தால் நடிப்பேன். இப்போதும் எனக்கு இந்த தருணத்தை நினைத்தால் கனவாக இருக்கிறது. நான் ராதா ரவி வீட்டில் குடியிருக்கும்போது தான், எனது முதல் படம் பண்ணினேன்.

இந்தப்படத்தில் ஹீரோ என்பவர் கதையும் திரைக்கதையும் தான். இரண்டாவது ஹீரோ இந்த படத்தின் டைட்டில் தான். இந்தப் படத்தில் எனக்கு ஜோடி இல்லை. இந்த நிகழ்ச்சிக்கு கனகா வருவதாக இருந்தது. ஆனால், சந்தான பாரதி வந்ததால், அவர் வரவில்லை. என் ரசிகர்கள் என் தாய் தந்தையரைவிட நான் மதிக்க வல்லவர்கள்.

காசுக்கு நடிக்க நான் தரங்கெட்டவன் கிடையாது... - நடிகர் ராமராஜன்!

இந்த தமிழ்நாட்டுத் தாய்மார்களும், மன்றங்களும் தான் எனது படத்தை வெற்றிப் பெற வைத்தவர்கள். இத்தனை கேமராக்கள் முன்பு நான் பேசுவது இதுதான் முதல்முறை. 5 ஆண்டுகள் திரையரங்கத்தில் போஸ்டர் ஒட்டி, டிக்கெட் கிழித்து, என்னென்னவோ செய்து, துணை இயக்குநர் ஆகி அதன் பின் நடிக்க வந்தேன்.

ஒவ்வொரு தயாரிப்பாளருக்கும் தன்னம்பிக்கை, தைரியம் வந்தால் சினிமா ஓஹோ என இருக்கும். 100 கோடி ரூபாய் கொடுத்தாலும் தாறுமாறாக நடிக்க நான் ஒன்றும் தரம்கெட்ட நடிகன் இல்லை. தலைவர் எம்.ஜி.ஆர் வழி வந்தவன்.

நான் தியேட்டரில் வேலை செய்யும்போது எம்.ஜி.ஆர் படங்களை ஒவ்வொன்றாகப்பார்த்து பார்த்து தான் எனக்கு அவரை பிடித்தது. இதையடுத்து தான் நான் நடிக்க வந்தேன். நான் நினைத்தது 50 படங்களில் சோலோ ஹீரோவாக நடிக்க வேண்டும்.

இதுவரை 44 படங்களில் நான் சோலோ ஹீரோவாக நடித்துள்ளேன், இந்தப் படமும் அப்படி தான். வேறு யாரும் அப்படி நடித்தது இல்லை. 50 படம் வரை நான் சோலோ ஹீரோவாக தான் நடிப்பேன். ஒரு படத்தின் டைட்டில் என்பது பெற்ற பிள்ளைக்கு பேர் வைப்பது போல.

ஒரு படத்திற்கு டைட்டில் வைத்த பிறகு பார்ட் 2 என ஏன் டைட்டில் வைக்கிறீர்கள்? புதிய பெயரை வைக்க வேண்டியது தானே. ஒரு பிள்ளை பெற்றால் ஒரு பெயர் வைக்கும் நாம், இரண்டாவது பிள்ளைக்கு பார்ட் 2 என்றா பெயர் வைக்கிறோம்?” என உணர்ச்சி பொங்க பேசினார்.

இதையும் படிங்க: நானே வருவேன் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details