சென்னை: தமிழ் சினிமாவில் பல தரப்பட்ட ரசிகர்களிடம் தனக்கென தனி இடம் பிடித்தவர் இசையமைப்பாளர் அனிருத். கடந்த வெள்ளிக்கிழமை (அக் 21) சென்னையில், அனிருத்தின் 'ராக்ஸ்டார் ஆன் ஹாட்ஸ்டார்' இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
ராக்ஸ்டார் ஆன் ஹாட்ஸ்டார்.. ஆர்ப்பரித்த ரசிகர்களுக்கு மத்தியில் அனிருத்...
ராக்ஸ்டார் ஆன் ஹாட்ஸ்டார் என்னும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற அனிருத், ரசிகர்களின் ஆரவாரத்தில் துள்ளலாக தனது ராக் இசையோடு பாடல் பாடி அசத்தினார்.
ராக்ஸ்டார் ஆன் ஹாட்ஸ்டார்.. ஆர்ப்பரித்த ரசிகர்களுக்கு மத்தியில் அனிருத்
இதனை 20,000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் நேரடியாக கண்டு ரசித்தனர். அதுமட்டுமல்லாமல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் நேரலையாகவும் பார்த்து ரசித்தனர். இவ்வாறு ஒரு இசை நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பப்படுவது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை. பின்னணி பாடகி ஜொனிடா காந்தியும் அனிருத் உடன் இணைந்து ரசிகர்களுக்கு இசை விருந்தை தீபாவளி பரிசாக வழங்கினர்.
இதையும் படிங்க:அனிருத் இசை நிகழ்ச்சிக்கு மெட்ரோ ரயிலில் விளம்பரம்