தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

'டாடா' படத்தை வெளியிடும் ரெட் ஜெயன்ட் மூவிஸ்! - dada movie latest update

கணேஷ் கே.பாபு இயக்கத்தில் கவின் - அபர்ணா தாஸ் நடிக்கும் 'டாடா' படத்தை உலகம் முழுவதும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடுகிறது.

'டாடா' படத்தை உலகம் முழுவதும் வெளியிடும் ரெட் ஜெயன்ட் மூவிஸ்!
'டாடா' படத்தை உலகம் முழுவதும் வெளியிடும் ரெட் ஜெயன்ட் மூவிஸ்!

By

Published : Jan 2, 2023, 2:48 PM IST

Updated : Jan 2, 2023, 3:14 PM IST

சென்னை: நடிகர் கவின் நடிப்பில் உருவாகியுள்ள 'டாடா' திரைப்படம், அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் படத்தின் முதல் பார்வை மற்றும் வெளியாகியுள்ள பாடல்கள் இந்த எதிர்பார்ப்பை இன்னும் அதிகமாக்கியுள்ளது.

படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக தயாராக உள்ளது.

இந்நிலையில், படத்தினை உலகம் முழுவதும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
ரொமாண்டிக் எண்டர்டெயினர் படமான 'டாடா' சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. கணேஷ் கே பாபு எழுதி இயக்கி இருக்கும் இந்தப் படத்தை ஒலிம்பியா மூவிஸ் எஸ்.அம்பேத்குமார் தயாரிக்கிறார்.

படத்தின் ஆடியோ, ட்ரைய்லர் மற்றும் திரையரங்குகளில் வெளியீட்டு தேதி குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும். அபர்ணா தாஸ் கதாநாயகியாக நடிக்க, கே.பாக்யராஜ், ஐஷ்வர்யா, 'முதல் நீ முடிவும் நீ' புகழ் ஹரிஷ், ’வாழ்' புகழ் பிரதீப் ஆண்டனி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இதையும் படிங்க: Thunivu trailer:"ஹீரோ மாதிரி நடிக்க வேண்டாம்" மிரளவைக்கும் 'துணிவு' டிரைலர் வெளியீடு!

Last Updated : Jan 2, 2023, 3:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details