தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

ராஷ்மிகாவின் சருமத்தை காக்கும் ரகசியம் என்ன? - face sheet mask

Rashmika Mandanna: இந்திய சினிமாவில் முன்னனி கதாநாயகியாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருக்கும் நேரத்தில் தன் சருமத்தை எப்படி பராமரித்து கொள்கிறார் என தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது.

நடிகை ராஷ்மிகா மந்தனா
நடிகை ராஷ்மிகா மந்தனா

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 10, 2024, 9:53 PM IST

ஹைதராபாத்: இந்திய சினிமாவில் முன்னனி கதாநாயகியாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் 2016ஆம் ஆண்டு கன்னடத்தில் கிரீக் பார்ட்டி என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். 2018ஆம் ஆண்டு தெலுங்கில், நடிகர் விஜய் தேவரகொண்டவுடன் இணைந்து 'கீதா கோவிந்தம்' படத்தின் மூலம் அறிமுகமாகி தென்னிந்தியாவில் பிரபலமானார்.

தமிழில் நடிகர் கார்த்தி நடித்த சுல்தான் திரைப்படம் மூலம் அறிமுகமானார். பின்னர், நடிகர் விஜயுடன் வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார். இவர் தற்போது அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து பிஸியான கதாநாயகியாக வலம் வருகிறார். இவர் படங்களில் மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் நடிகையாக இருக்கிறார்.

மேலும், இவரது இன்ஸ்டா பதிவுகளுக்கென தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், முகத்தில் ஃபேஸ் மாஸ்கை அணித்து பிஸியான நேரங்களிலும் அவர் தன்னை எப்படி பராமரித்து கொள்வார் என பதிவிட்டுள்ளார். இவர் பதிவிட்ட ஸ்டோரி பலரால் பகிரப்பட்டு வருகிறது.

நடிகை ராஷ்மிகா மந்தனா இன்ஸ்டா பதிவு

அதில் அவர், "இப்போது என்ன செய்வது.. அதிக வேலை.. தூக்கமின்மை.. பயணம்.. உங்கள் சருமத்திற்கு ஓய்வு இல்லை.. தோல் மருத்துவரிடம் செல்வதற்கு நேரமில்லை.. அப்புறம் என்ன செய்வீர்கள்.. ஒரே தீர்வு-ஷீட் மாஸ்க்குகள்" என பதிவிட்டுள்ளார்.

தென்னிந்தியாவில் பிரபலமாக இருந்த ராஷ்மிகா, பாலிவுடில் நடிகர் அமிதாப் பச்சனுடன் 'குட்பை' படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர், சமீபத்தில் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய 'அனிமல்' படத்தில் நடிகர் ரன்பீர் கபூரின் மனைவியாக நடித்திருந்தார். இப்படம் விமர்சன ரீதியாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. உலகளவில் 800 கோடி ரூபாய்க்கும் மேல் அனிமல் திரைப்படம் வசூலித்துள்ளதாக படக் குழு கூறி உள்ளது.

அனிமல் திரைப்படத்திற்கு முன் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா திரைப்படமான மிஷன் மஜ்னுவிலும் ராஷ்மிகா மந்தனா நடித்து இருந்தார். இதன் மூலம் ஹாலிவுட்டிலும் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். தற்போது புஷ்பா 2: தி ரூல் படத்தில் அல்லு அர்ஜூன் ஜோடியாக ராஷ்மிகா நடித்து வருகிறார்.

இதையும் படிங்க:இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் - ஒரு பார்வை..!

ABOUT THE AUTHOR

...view details