சென்னை: அபிஷேக் சர்மா இயக்கத்தில் அக்ஷய் குமார், ஜாக்குலின் பெர்னாண்டஸ், நாசர், சத்யதேவ் மற்றும் நுஸ்ரத் பருச்சா உள்ளிட்டோர் நடித்துள்ள படம், ராம் சேது. இப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு நேற்று (அக் 25) வெளியானது. இப்படத்தில் ராமேஸ்வரத்தில் உள்ள ராமர் பாலத்தை ராமர்தான் கட்டினார் என்பதற்கு ஆதராங்கள் இருப்பதாக காட்டப்பட்டுள்ளது.
படத்தின் அடிப்படையில், சேது சமுத்திர திட்டத்திற்காக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. தொல்லியல்துறை ஆய்வாளரான அக்ஷய் குமார், வழக்கிற்காக ராமர் பாலம் குறித்து ஆய்வு செய்கிறார். இதில் ராமர் பாலம் 7,000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது என்றும், அது ராமர் வாழ்ந்த காலக் கட்டத்தை ஒத்தியிருங்கிறது என்றும் அக்ஷய் குமார் கண்டுபிடிக்கிறார்.