தமிழ் சினிமாவில் தற்போது எடுக்கப்படும் படங்களுக்கு அதிகமாக ஆங்கிலத்தில் தலைப்புகள் வைக்கப்படுகின்றன. இல்லை என்றால், சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படங்களின் தலைப்பு வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால், ரஜினிகாந்த் நடித்த படங்களின் தலைப்பு வைக்கப்படும் போக்கும் தற்போது அதிகரித்துக் காணப்படுகிறது.
ரஜினி படத்தலைப்புகளான “வீரா, தர்மதுரை, ராஜாதி ராஜா, குரு சிஷ்யன், மனிதன், வேலைக்காரன், படிக்காதவன், நான் சிகப்பு மனிதன், நான் மகான் அல்ல, தங்கமகன், ரங்கா, போக்கிரி ராஜா, நெற்றிக்கண், கழுகு, பொல்லாதவன், காளி, நினைத்தாலே இனிக்கும், குப்பத்து ராஜா,” ஆகியவை வெவ்வேறு நடிகர்களின் படங்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன.