இயக்குநர் கதிரேசன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ’ருத்ரன்’ படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் அப்படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்படத்தில் ராகவா லாரன்ஸ்க்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ராகவா லாரன்ஸ் நடிக்கும் ’ருத்ரன்’..! - ருத்ரன்
நடிகர் மற்றும் இயக்குநரான ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘ருத்ரன்’ திரைப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் அப்படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது.
ராகவா லாரன்ஸ் நடிக்கும் ’ருத்ரன்’..!
இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் இப்படம் வருகிற கிறுஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாகுமென அறிவித்துள்ளனர். ஹாலிவுட்டில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள அவதார் திரைப்படமும் கிறுஸ்துமஸ் பண்டிகையன்று வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உலகளவில் மற்றுமொரு சாதனைபுரிந்த 'ஆர்.ஆர்.ஆர்'!