சென்னை: இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் நடிகர் ரஜினிகாந்த். நான்கு தசாப்தங்களாக மக்களை மகிழ்வித்து வரும் இவரது நடிப்பில் தற்போது ஜெயிலர் திரைப்படம் வெளியாக உள்ளது. கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை தொடர்ந்து இயக்குநர் நெல்சன் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். மேலும் இப்படத்தில் தமன்னா, மோகன் லால், சிவ்ராஜ் குமார், சுனில், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
நெல்சனின் ’dark comedy' கலந்த ஆக்ஷன் படமாக இது உருவாகியுள்ளது. சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தின் டிரெய்லர் மிகப் பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. டிரெய்லரில் ரஜினிகாந்த் தோற்றமும் வசனங்களும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற சர்ச்சை எழுந்துள்ள இந்நேரத்தில் ரஜினிகாந்த் தான் சூப்பர் ஸ்டார் என்று மார்தட்டி கொள்ளும் அளவிற்கு ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது ஜெயிலர் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
ஜெயிலர் பட வெளியீட்டை முன்னிட்டு பெங்களூரில் செயல்படும் ஒரு தனியார் நிறுவனம் தனது அலுவலகத்திற்கு பொது விடுமுறை அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஆகஸ்ட் 10ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் வெளியாக உள்ளது. இதனால் எங்கள் எச்ஆர் டிபார்ட்மெண்ட்க்கு குவியும் விடுமுறை விண்ணப்பங்களை தவிர்க்கும் பொருட்டு அன்றைய தினம் நிறுவனத்திற்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.