தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

’சர்தார் வேறு திரைப்படம், பிரின்ஸ் வேறு மாதிரியான திரைப்படம் ‘ - சிவகார்த்திகேயன் - பிரின்ஸ்

பிரின்ஸ் திரைப்படத்தின் கதைக்களம் வேறு, சர்தார் படத்தின் கதைக்களம் முற்றிலும் வேறு என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

’சர்தார் வேறு திரைப்படம்,  பிரின்ஸ் வேறு மாதிரியான திரைப்படம்...! ‘ - சிவகார்த்திகேயன்
’சர்தார் வேறு திரைப்படம், பிரின்ஸ் வேறு மாதிரியான திரைப்படம்...! ‘ - சிவகார்த்திகேயன்

By

Published : Oct 18, 2022, 11:02 AM IST

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ’பிரின்ஸ்’ திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று(அக்.17) சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன், மரியா, பாரத், பிராங்ஸ்டார் ராகுல், தயாரிப்பாளர் அன்புச்செழியன், சுப்பு பஞ்சு, இயக்குநர் அனுதீப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

’சர்தார் வேறு திரைப்படம், பிரின்ஸ் வேறு மாதிரியான திரைப்படம்...! ‘ - சிவகார்த்திகேயன்

நிகழ்ச்சியில் மேடையில் பேசிய சிவகார்த்திகேயன், “’ப்ரின்ஸ்’ திரைப்படம் மிக எளிமையான கதைக்களம் இந்திய ஆண் ஒரு பிரிட்டிஷ் பெண்ணை காதலிப்பது தான் படம். அதைத் தாண்டி காமெடியோடு பல விஷயங்களை படத்தில் அணுகியுள்ளோம். இந்தக் கதைக் களத்திற்காக இயக்குநர் கற்பனையிலேயே புதிய ஊரையே உருவாகியுள்ளார்.

கலர்புல், ஜாலியான படம் ’ப்ரின்ஸ்’. இந்த படத்தோடு கார்த்தியின் ’சர்தார்’ படம் வருகிறது இரண்டும் வேறு வேறு கதைக்களம். இரண்டு படங்களும் மாபெரும் வெற்றி பெற வேண்டும். எல்லாருடைய படங்களையும் தீபாவளியில் திரை அரங்கில் படம் பார்த்துள்ளேன் ஆனால் இன்று என்னுடைய படங்கள் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது என்பது கூடுதல் சந்தோஷமும் சிறப்பும்” என்றார்.

இதையும் படிங்க: சமந்தாவின் யசோதா பட ரீலிஸ் தேதி அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details