தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

பிறந்த நாளில் ரசிகர்களுக்கு ‘புராஜெக்ட் கே’ பட போஸ்டரை பரிசளித்த பிரபாஸ் - Happy birthday prabhas

நடிகர் பிரபாஸின் பிறந்தநாளன்று, பிரம்மாண்டமாக தயாராகி வரும் ‘புராஜெக்ட் கே’ படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசாக ‘புராஜெக்ட் கே’ பட போஸ்டரை பரிசளித்த பிரபாஸ்
ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசாக ‘புராஜெக்ட் கே’ பட போஸ்டரை பரிசளித்த பிரபாஸ்

By

Published : Oct 24, 2022, 7:37 AM IST

சென்னை: டோலிவுட் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் பொன்விழா படைப்பாக ‘புராஜெக்ட் கே’ திரைப்படம் உருவாகி வருகிறது. இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கி வரும் இப்படத்தில், முன்னணி நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதில் தீபிகா படுகோனே, அமிதாபச்சன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இதன் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே நேற்று (அக் 23) பிரபாஸ், தனது 42ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த நிலையில் புராஜெக்ட் கே படத்தின் போஸ்டரை, படக்குழு வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளது. 'நாயகர்கள் பிறப்பதில்லை. அவர்கள் உதிக்கிறார்கள்' என்ற வார்த்தைகள் அடங்கிய இந்த போஸ்டரை, அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படிங்க:ரசிகர்கள் கலாய்த்து தள்ளும் 'ஆதி புருஷ்' டீஸர்!

ABOUT THE AUTHOR

...view details