திரைத்துறையின் முன்னணி நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ள பிரம்மாண்ட படம் ’பொன்னியின் செல்வன்’. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தின் முதல் பாகம் PS-1 செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் சில காட்சிகள் மீண்டும் படமாக்கப்பட்டு வருவதாகத் தகவல் பரவியுள்ளது.
’பொன்னியின் செல்வன்’ மீண்டும் படப்பிடிப்பா..? : படக்குழு அளித்த விளக்கம் - மணிரத்னம்
பிரம்மாண்டமாகத் தயாராகிவரும் இயக்குநர் மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் சரியாக வராததால் இயக்குநர் மணிரத்னம் அதிருப்தியில் இருப்பதாகத் தகவல்கள் வெளியான நிலையில் இதனை படக்குழு மறுத்துள்ளது.
அதன்படி இப்படத்தின் ஒரு சில காட்சிகளில் இயக்குனர் மணிரத்னத்திற்கு திருப்தி இல்லாததால், மீண்டும் அந்தக் காட்சியை எடுத்து வருகிறார் என்றும் கூறப்பட்டது. இது தவறான செய்தி என்றும் படம் உருவாகியுள்ளதில் இயக்குனர் மணிரத்னம் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், தயாரிப்பாளர்களின் திட்டத்தின் படி போஸ்ட் புரொடக்ஷன் பணி நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. திட்டமிட்டபடி செப்டம்பர் 30ம் தேதி படத்தை வெளியிட படக்குழு முழுமூச்சாக பணியாற்றி வருகிறது.
இதையும் படிங்க: ’நெஞ்சுக்கு நீதி’ வெற்றி - இயக்குனருக்கு உதயநிதி நன்றி!