மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், சரத்குமார், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பார்த்திபன், ஜெயராம் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’.
'கல்கி' எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை தழுவி, இயக்குநர் மணிரத்னம் இத்திரைப்படத்தை எடுத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் அடுத்த மாதம் 30ஆம் தேதி வெளியாகவுள்ளது.