தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

பிரமாண்டமாக நடைபெறவுள்ள 'பொன்னியின் செல்வன்' ஆடியோ வெளியீட்டு விழா... தேதி தெரியுமா? - கல்கி

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா அடுத்த மாதம் 6ஆம் தேதி நடைபெற உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள ’பொன்னியின் செல்வன்’ ஆடியோ வெளியீட்டு விழா
பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள ’பொன்னியின் செல்வன்’ ஆடியோ வெளியீட்டு விழா

By

Published : Aug 30, 2022, 7:11 PM IST

சென்னை: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், சரத்குமார், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பார்த்திபன், ஜெயராம் எனப் பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா அடுத்த மாதம் 6ஆம் தேதி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ரஜினி, கமல்ஹாசன் இருவருக்கும் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளதாகவும், இருவரும் கலந்துகொள்ள வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

சில நாட்களுக்கு முன்னதாக, வெளியான படத்தின் டீஸர் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும், அதனைத்தொடர்ந்து வெளியான 'பொன்னி நதி' மற்றும் ’சோழா சோழா’ ஆகிய பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றன.

கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி, இயக்குநர் மணிரத்னம் இத்திரைப்படத்தை எடுத்து முடித்துள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்துள்ளது.

இதையும் படிங்க:“பேப்பர் ராக்கெட்” வெற்றியைப்பற்றி இசையமைப்பாளர் சைமன் கே.கிங்!

ABOUT THE AUTHOR

...view details