தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

திரையரங்குகளில் சிறப்பு காட்சிகளுக்கு மீண்டும் அனுமதி - தமிழ்நாடு அரசு - vijay

பொங்கல் பண்டிகையையொட்டி, வரும் ஜனவரி 12, 13, 18ஆகிய தேதிகளில் வழக்கமான காட்சிகளுடன், கூடுதலாக ஒரு காட்சியை திரையரங்குகளில் திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jan 11, 2023, 11:08 PM IST

சென்னை:பொங்கல் பண்டிகையையொட்டி, இன்று (ஜன.11) முதல் முதல் 18ஆம் தேதி வரை சிறப்புக் காட்சிகள் திரையிட அனுமதி கேட்டு தமிழ்நாடு அரசுக்கு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது. அதில், ஏற்கனவே போகி பண்டிகை, பொங்கல், திருவள்ளுவர் தினம், காணும் பொங்கல் என 14.1.2023 முதல் 17.1.2023 வரை 4 நாட்கள் சிறப்பு காட்சிகளை நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளதை சுட்டிக்காட்டினர்.

வரும் 12.1.2023, 13.1.2023 ஆகிய நாட்களிலும் மற்றும் 18.1.2023 தேதியிலும் சிறப்புக்காட்சி நடத்த அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தமிழ்நாடு அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் அதிகாலை 4 மணி மற்றும் 5 மணி சிறப்புக் காட்சிகள், 13ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை ரத்து என நேற்று அறிவிப்பு வந்தது.

தற்போது, பொங்கல் பண்டிகையினையொட்டி, வெளியாகிய புதிய படங்களுக்கான சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையியில் தமிழ்நாடு அரசு, திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று 12, 13, 18 ஆகிய தேதிகளில் வழக்கமான காட்சிகளுடன், கூடுதலாக ஒரு காட்சியை திரையரங்குகளில் திரையிட இன்று அனுமதி வழங்கி உள்ளது. இதனால் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர், திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: Varisu Vs Thunivu: வாரிசு, துணிவில் பட்டையைக் கிளப்பும் அரசியல் வசனங்கள் - துள்ளிக்குதிக்கும் ரசிகர்கள்!

ABOUT THE AUTHOR

...view details