சக்திவேல் இயக்கத்தில் நடிகர் பரத், வாணி போஜன் உள்ளிட்டோர் நடித்துள்ள மிரள் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படம் குறித்து பரத், இயக்குனர் சக்திவேல் மற்றும் தயாரிப்பாளர் டில்லி பாபு ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய நடிகர் பரத், இது எனக்கு முக்கியமான படம். படம் ரொம்ப நன்றாக வந்துள்ளது. இது பேய் படம் கிடையாது. எமோஷனல், த்ரில்லர் என அனைத்து விதமான உணர்ச்சிகளும் இருக்கும். பெண்களுக்குப் பிடித்த படமாக இருக்கும்.
படம் முடிந்து வெளியே வரும்போது நல்ல படம் பார்த்த திருப்தி இருக்கும். இது பீட்சா படம் போல் கிடையாது. கதை கேட்கும் போது வித்தியாசமாக இருந்தது. முக்கியமாக இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மீது நம்பிக்கை இருந்தது.
படத்தின் ஸ்பாய்லரை யாரும் வெளியில் சொல்ல வேண்டாம். நல்ல படம் பண்ணியுள்ளேன் என்ற நம்பிக்கை உள்ளது. நல்ல கதையைத் தேர்வு செய்ய சரியான நேரம் வேண்டும் அந்த சரியான நேரம் இது என்று நினைக்கிறேன்.
பீட்சா படத்திற்கும் மிரள் படத்திற்கும் தொடர்பு இல்லை இதையும் படிங்க:'லவ் டுடே' பிரதீப்பை நேரில் அழைத்து பாராட்டிய ரஜினி!