ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான 'பென்சில்' படத்தின் இயக்குநர் மணி நாகராஜ் மாரடைப்பு காரணமாக இன்று(ஆக.25) காலமானார். நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார், ஸ்ரீதிவ்யா நடிப்பில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'பென்சில்'. இந்தப் படத்தை இயக்குநர் மணி நாகராஜ் இயக்கியிருந்தார்.
இப்படத்தை அடுத்து கோபிநாத், அனிகா சுரேந்திரா, வனிதா விஜய்குமார், லீனா குமார், சீதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் 'வாசுவின் கர்ப்பிணிகள்' படத்தை இயக்கியிருந்தார். கடந்த ஜூலை 7ஆம் தேதியன்று இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக்கை நடிகர் விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்தப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ள நிலையில், இன்று(ஆக.25) அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.