சென்னை: சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்'. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது. பல ஆண்டுகளுக்குப் பிறகு வடிவேலு கதாநாயகனாக நடிக்கும் படம் என்பதால் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
வடிவேலு குரலில் "பணக்காரன்" பாடல் வெளியானது - tamil cinema
வடிவேலு நடிப்பில் வெளியாக உள்ள 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' படத்தின் "பணக்காரன்" என்கிற பாடல் வெளியானது.
இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் பிரபுதேவா நடனம் அமைத்திருந்த அப்பத்தா என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் இன்று பணக்காரன் என்ற மற்றொரு பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இப்பாடலையும் வடிவேலு பாடியுள்ளார். மிகவும் ரகளையான பாணியில் உருவாகியுள்ள இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் அடுத்த மாதம் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இதையும் படிங்க: பாலியல் புகாரில் சிக்கிய 78வயது 'ஸ்குவிட் கேம்' நடிகர்!