அமெரிக்காவில் வழங்கப்படும் அகாடமி விருது எனப்படும் ஆஸ்கர் விருது உலக திரைத்துறையில் வழங்கப்படும் புகழ்பெற்ற விருதாகும். பலகாலமாக இந்த விருதை பெற இந்திய சினிமா நட்சத்திரங்கள் முயற்சி செய்து வருகிறார்கள்.
கடந்த ஆண்டு சூர்யாவின் சூரரைப்போற்று ஆஸ்கர் விழாவுக்கு அனுப்பப்பட்டது. பரிந்துரைக்கு முன்னால் இறுதி செய்யப்பட்ட 366 படங்களின் பட்டியலில் ஒரே ஒரு இந்திய படமாக சூரரைப் போற்று இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதனைத்தொடர்ந்து தற்போது நடிகர் சூர்யாவுக்கு ஆஸ்கர் அகாடமி அழைப்பு விடுத்துள்ளது. ஆஸ்கர் அகாடமி உறுப்பினர்களாக 397 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 397 பேரில் நடிகர் சூர்யா மற்றும் பாலிவுட் நடிகை கஜோலின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இந்திய சினிமாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் வெளியான இந்த செய்தியை அடுத்து நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க:விக்ரம் படப்பிடிப்பில் கமல் உடற்பயிற்சி - லோகேஷ் எடுத்த வீடியோ..!