தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

’விக்ரம்’ படத்தை இணையத்தில் வெளியிடத் தடை’ - சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவு

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் ’விக்ரம்’ திரைப்படத்தை இணையத்தில் வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

’விக்ரம்’ படத்தை இணையத்தில் வெளியிடத் தடை’ - சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவு
’விக்ரம்’ படத்தை இணையத்தில் வெளியிடத் தடை’ - சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவு

By

Published : May 27, 2022, 7:17 AM IST

நடிகர் கமல் நடிப்பில் வெளியாக உள்ள விக்ரம் திரைபடத்தை இணையதளத்தில் வெளியிடுவதற்கு தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படம் ஜூன் மாதம் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்தப் படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சிறப்பு தோற்றத்தில் சூர்யாவும் இடம்பெற்றுள்ளார். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்கிறது. இந்நிலையில், வருகின்ற ஜூன் 3ம் தேதி திரைக்கு வர உள்ள விக்ரம் திரைபடத்தினை இணையதளங்களில் சட்ட விரோதமாக வெளியிடத் தடைவிதிக்க இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிடக்கோரி படத்தின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த மனு நீதிபதி சி.சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியம், கமல், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களை கொண்டு பெரும் பொருள் செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம், இணையத்தில் வெளியிட எந்த அனுமதியும் பட தயாரிப்பு நிறுவனம் வழங்கவில்லை. அனுமதியின்றி படம் வெளியானால் பெரும் நஷ்டம் ஏற்படும்.

மேலும், இது போன்று அனுமதியின்றி படத்தை வெளியிடுவது காப்புரிமை சட்டத்திற்கு எதிரானது. எனவே சட்டவிரோதமாக 1308 இணையத்தில் வெளியிட உள்ளதால் இவற்றுக்குத் தடை விதிக்க இணையதள சேவை வழங்கும் பி.எஸ்.என்.எல், ஏர் டெல், ஜியோ உள்ளிட்ட தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

இதனை ஏற்று நீதிபதி சி. சரவணன் விக்ரம் படத்தை இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிடுவதற்குத் தடைவிதித்து இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார். மேலும், மனு தொடர்பாக பி.எஸ்.என்.எல், ஏர்டெல், ஜீயோ உள்ளிட்ட நிறுவனங்கள் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணை ஜூலை 1 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க: 'இதனால் தான் ஹிந்தியில் ''விக்ரம் ஹிட்லிஸ்ட்'' எனப் பெயர் வைத்தோம்..!' - கமல்ஹாசன்

ABOUT THE AUTHOR

...view details