சென்னை: இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'இந்தியன் 2' (indian 2). இப்படத்தில் காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
மேலும் இந்தியன் 2 படப்பிடிப்பு 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன்பின் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக தற்காலிகமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. பின்னர் தொடர்ந்து கொரோனா, படத்தின் பட்ஜெட் என தொடர் பிரச்சனைகள் காரணமாக படப்பிடிப்பு தடைபட்டது.
அதன் பிறகு அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு படப்பிடிப்பு மீண்டும் தொடங்க உள்ளதாக கூறப்பட்டது. ஏற்கனவே லைகா புரோடக்ஷன்ஸ் நிறுவனம் ‘இந்தியன் 2’ படத்தை தயாரித்து வந்த நிலையில், தற்போது ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனமும் இப்படத்தின் தயாரிப்பில் கைகோர்த்துள்ளது.
இந்நிலையில் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னையில் மீண்டும் தொடங்கியது. சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் பிரம்மாண்டமான செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றது. அடுத்தகட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் டிச.5ம் தேதி சென்னை விமான நிலையத்தில் நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: Etv Bharat Exclusive: ஜெய் பீம் 2 அப்டேட்?