இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் ’வாரிசு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இந்தப் படம் 2023ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. முதல் முறையாக நேரடி தெலுங்கு படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
தளபதி ரசிகர்களுக்கு தீபாவளி ட்ரீட் - வாரிசு படத்தின் புதிய போஸ்டர் - வெளியானது வாரிசு படத்தின் புதிய போஸ்டர்
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் ‘வாரிசு’ படத்தின் புதிய போஸ்டர் தீபாவளி பண்டிகையை ஒட்டி இன்று (அக்-20) வெளியாகியுள்ளது.
Etv Bharatதளபதி ரசிகர்களுக்கு தீபாவளி ட்ரீட் - வெளியானது வாரிசு படத்தின் புதிய போஸ்டர்
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், விஜய் கதாபாத்திரத்தின் பெயர் என்று அடுத்தடுத்து அப்டேட் கொடுத்த படக்குழுவினர் இன்று தீபாவளியை முன்னிட்டு வாரிசு படத்தின் புதிய போஸ்டரை ஒன்று வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் விஜய் ஆக்ஷன் கலந்த ஸ்டைல் லுக்கில் உள்ளார். கையில் சுத்தியல் வைத்துள்ளார். விஜய் ரசிகர்கள் இந்த போஸ்டரை ஷேர் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க:ஹேப்பி தீபாவளி.. ஸ்டைலான பிளையிங் கிஸ்.. ரசிகர்களுடன் ரஜினிகாந்த் சந்திப்பு...