தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி வெளியானது - ரசிகர்கள் கொண்டாட்டம்! - போனி கபூர்

அரண்ராஜா இயக்கத்தில் நடிகர் உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி திரைப்படம் இன்று வெளியானது.

உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி வெளியானது
உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி வெளியானது

By

Published : May 20, 2022, 10:43 AM IST

போனி கபூரின் பே வியூ புரோஜக்ட்ஸ் மற்றும் ரோமியா பிக்சர்ஸ் ராகுல் இணைந்து தயாரித்திருக்கும் 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ளார். இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்.

பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகி சாதியத்தின் கோர முகத்தைப் பட்டவர்த்தனமாக கிழித்தெறிந்த படம் 'ஆர்ட்டிக்கிள் 15'. இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்காக 'நெஞ்சுக்கு நீதி' உருவாகியுள்ளது.

உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி வெளியானது

இப்படத்தில் காவல் துறை அலுவலராக நடித்துள்ள உதயநிதியுடன் கதாநாயகியாக நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். இவர்களுடன் ஆரி அர்ஜுனன், ஷிவானி ராஜசேகர், மயில்சாமி, சுரேஷ் சக்ரவர்த்தி, இளவரசு, ‘ராட்சசன்’ சரவணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் இன்று தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதனை உதயநிதி ரசிகர்கள் மற்றும் திமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆர்யாவின் "கேப்டன்" படத்தை கைப்பற்றிய உதயநிதி!

ABOUT THE AUTHOR

...view details