மும்பை:மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நீதிமன்றத்தில் நடிகர் நவாசுதீன் சித்திக், ரூ. 100 கோடி கேட்டு அவரது முன்னாள் மனைவி ஆலியா மற்றும் சகோதரர் ஷம்சுதீன் சித்திக் மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு மார்ச் 30 ஆம் தேதி நீதிபதி ரியாஸ் சாக்லா தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட உள்ளது.
பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக்குக்கும் அவரது மனைவி ஆலியா என்பவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களது பிரிவுக்கு பின் ஆலியா துபாய்க்கு சென்று விட்டார். இந்த நிலையில் மும்பை திரும்பி நவாசுதீன் சித்திக் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். இதற்கு நவாசுதீன் சித்திக்கும் பதிலளித்து வந்த நிலையில், இருவரும் நீதிமன்றத்தையும் நாடினர்.
இதையும் படிங்க:வாரணாசியில் பிரபல நடிகை தற்கொலை.. படப்பிடிப்பில் விபரீதம்.. கடைசி வீடியோ வைரல்..
இந்த சட்டப் போராட்டத்தில் நவாசுதீன் சித்திக், திடீர் திருப்பமாக அவரது முன்னாள் மனைவி ஆலியா மற்றும் சகோதரர் ஷம்சுதீன் சித்திக் இருவர் மீதும் மும்பை நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், தனது பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் விதமாக அவதூறான மற்றும் பொய்யான கருத்துகளை தெரிவித்து வருவதாக குற்றம்சாட்டி ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டுள்ளார்.